நீ கொஞ்சம் வாயை மூடு; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி
அரசு விழா மேடையில் பெண்ணை பார்த்து கொஞ்சம் வாயை மூடு என கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமைச்சர் பொன்முடி.
வாயை மூடு - சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் புதிதாக சீரமைக்கப்பட்ட பூங்கா திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர் பொன்முடி நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவில் பேசினார்.அப்போது உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருக்கிறதா என கேட்டார். அப்போது அங்கு இருந்த ஒரு பெண் இங்கே எல்லாமே குறையாகதான் இருக்கிறது என கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொன்முடி அந்த பெண்ணை பார்த்து நீ கொஞ்சம் வாயை மூடு என கூறினார். மேலும் உங்க கணவர் எங்கே என கேட்க, அவர் இறந்துவிட்டார் என அந்த பெண் கூறினார்.
உடனே நல்ல வேளை இறந்துவிட்டார் என கூறி சிரித்தார். அந்த பெண் பற்றி அமைச்சரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.