ஹிஜாப் தீர்ப்பு எதிரொலி கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு..! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Karnataka HijabRow HijabIssue ShutDown FewShops MuslimGroups
By Thahir Mar 17, 2022 07:23 AM GMT
Report

ஹிஜாப் வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் கர்நாடகாவில் கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் உள்ள கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து இஸ்லாமிய மாணவிகள் சிலர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

ஹிஜாப் தீர்ப்பு எதிரொலி கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு..! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | Shut Down Few Shops In Karnataka Hijab Issue

இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் இன்றியமையாத அங்கம் அல்ல என்று கூறி ஹிஜாப் அணிவதற்கான தடை தொடரும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளித்த நிலையில் இஸ்லாமிய அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

ஹிஜாப் தீர்ப்பு எதிரொலி கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு..! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | Shut Down Few Shops In Karnataka Hijab Issue

இந்த நிலையில் எஸ்டிபிஐ உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றினைந்து முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதனால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.