விராட் கோலியின் 11 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் சுப்மன் கில்... - குவியும் பாராட்டு...!

Virat Kohli Indian Cricket Team Shubman Gill
By Nandhini 1 வாரம் முன்

விராட் கோலியின் 11 ஆண்டுகால சாதனையை சுப்மன் கில் முறியடித்து சாதனைப்படைத்துள்ளார்.

விராட் கோலியின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்

நியூசிலாந்திற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து நட்சத்திர நாயகனாக மாறினார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.

இப்போட்டியில் முதல் ஆட்டக்காரராக களமிறங்கிய 78 பந்துகளில் 112 ரன்களை குவித்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.

112 ரன்கள் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 143.59 உடன் விராட் கோலியின் உலக சாதனையை முறியடித்தார் கில்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய பேட்ஸ்மேன் மூலம் அதிக ரன்கள் எடுத்த சாதனையை படைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமின் உலக சாதனையையும் சமன் செய்துள்ளார் ஷுப்மன் கில்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மொத்தம் 360 ரன்கள் எடுத்து மாஸ் காட்டியுள்ளார்.  

shubman-gill-virat-kohli-record-joins-babar-azam