சச்சின் மகளுக்கு நோ சொன்ன கில்... பிரபல நடிகையை காதலிப்பதை உறுதி செய்தார்? - ஷாக்கான ரசிகர்கள்

Shubman Gill Sara Ali Khan
By Nandhini Nov 15, 2022 11:07 AM GMT
Report

சுப்மன் கில்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரராக வலம் வருபவர் சுப்மன் கில். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். இவர் ஒருநாள் போட்டியில் மிகவும் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஒருநாள் போட்டிகளில் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றுள்ளார். இதுவரை இவர் 11 டெஸ்ட் போட்டி, 9 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கில்

நீண்ட நாட்களாக சமூகவலைத்தளங்களில் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாராவும், சுப்மன் கில்லும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தனர்.

இருவரும் சில புகைப்படங்களை தனித்தனியே பகிரும் போது ஒருவருக்கொருவர் கமெண்ட் செய்வதை வழக்கமாக வைத்து வந்தனர். ஆனால், சாராவும், நானும் காதலிக்கவில்லை. சிங்கிளாக தான் இருக்கிறேன் என்று கூறி இந்த கிசுகிசுவுக்கு முற்றுபுள்ளி வைத்தார் சுப்மன் கில்.

shubman-gill-sara-ali-khan

பிரபல நடிகையுடன் கில்

கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுடன், நடிகை சாரா அலிகான் இரவு உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டதாகவும், அந்த உணவகத்தில் இருந்த ரசிகை ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.

சூசகமாக நழுவிய கில்

சமீபத்தில் பஞ்சாபி சாட் நிகழ்ச்சியில் ஷுப்மன் கில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில், பாலிவுட்டில் ஃபிட்டான நடிகை யார் என்று கேட்க, உடனே, கில்... சாரா அலி கானின் பெயரை கூறினார்.

சாராவுடன் டேட் செய்கிறீர்களா என்று அடுத்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு... இருக்கலாம் என்று முதலில் கூறினார்.

இதையடுத்து சாராவை பற்றிய அனைத்து உண்மையையும் சொல்லுங்கள் கில் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்று கூறி நைசாக நழுவினார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.