அதிவேகமாக மைல்கல்லை எட்டி சாதனைப் படைத்த சுப்மான் கில்...! குவியும் பாராட்டு
1000 ரன் களை கடந்து அதிவேகமாக இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் சாதனைப் படைத்துள்ளார்.
நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது.
நேற்று இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் மைதானத்தில் இரு அணிகளுக்கு நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் இறுதியில் இந்திய அணி 12 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, இத்தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
அதிவேகமாக சாதனை படைத்த கில்
நேற்று நடைபெற்ற இப்போட்டியில், வெறும் 122 பந்துகளில் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் 150 ரன்களை எடுத்து இரட்டை சதம் அடித்து சாதனைப் படைத்தார்.
இந்த ஆட்டத்தில் சுப்மான் கில் 109 ரன்கள் எடுத்திருந்த போது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆயிரம் ரன்களை கடந்தார். அவர் தனது 19-வது இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டி சாதனைப் படைத்துள்ளார். இதனையடுத்து, 1000 ரன்களை அதிவேகமாக தொட்ட இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.