2027 முதல் அவர் தான் இந்தியாவின் ஆல் ஃபார்மட் கேப்டன் - முன்னாள் பயிற்சியாளர் தகவல்

Indian Cricket Team Shubman Gill
By Sumathi Aug 06, 2024 07:40 AM GMT
Report

2027 முதல் இந்தியாவின் ஆல் ஃபார்மட் கேப்டன் குறித்த தகவலை ஸ்ரீதர் பகிர்ந்துள்ளார்.

ஆல் ஃபார்மட் கேப்டன்

டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 17 வருடங்களுக்கு பின் வென்றது. அதனைத் தொடர்ந்து, ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர்.

indian cricket team

அதன்பின், புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமாரை தேர்ந்தெடுத்தார். அதே போல சுப்மன் கில் இந்திய அணியின் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் தோல்விக்கு காரணமே இதுதான் - உண்மை உடைத்த அபிஷேக் நாயர்!

இந்திய அணியின் தோல்விக்கு காரணமே இதுதான் - உண்மை உடைத்த அபிஷேக் நாயர்!

ஸ்ரீதர் பேட்டி

இந்நிலையில் இதுதொடர்பாக பேசியுள்ள முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், “என்னைப் பொறுத்த வரை சுப்மன் கில் ஆல் ஃபார்மட் பிளேயர்.

2027 முதல் அவர் தான் இந்தியாவின் ஆல் ஃபார்மட் கேப்டன் - முன்னாள் பயிற்சியாளர் தகவல் | Shubman Gill As Indias Next Captain After Cwc 2027

தற்போதைய நிலைமையில் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் துணை கேப்டனாக செயல்படுவார்.

அதே சமயம் 2027 உலகக் கோப்பை முடிந்த பின் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அவரை இந்தியா தங்களுடைய கேப்டனாக பார்க்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.