சினிமாவில் ஹீரோவாகும் சுப்மன் கில் - என்ன சொன்னார் தெரியுமா?
சினிமாவில் நடிக்கவிருக்கும் தகவல் குறித்து சுப்மன் கில் பேசியுள்ளார்.
சுப்மன் கில்
பஞ்சாபை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்(23). ஐ.பி.எல். சீசனில் குஜராத் அணியின் வீரராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிகமான ரன் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்நிலையில், சுப்மன் கில் சினிமாவில் களமிறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியது. இதுகுறித்து பேசிய அவர், என்னிடம் உள்ள நடிப்பு திறனை வெளிப்படுத்த நினைக்கிறேன். ஆனால் நான் திரைப்படங்களில் நடிக்கலாம், நடிக்காமலும் போகலாம்.
சினிமா?
திறன் குறித்து நான் பேசுவது, நான் நடிப்பு பயிற்சிக்கு செல்ல வேண்டும். என்பதைத் தான். நான் வாழ்க்கையின் ஒரு பகுதியில் இதனை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். இதன் காரணமாகவே டப்பிங் செய்தேன்.சினிமா ஆர்வத்தை செலுத்த கூடிய ஒரு வேலை என்பதால் எனக்கு அதில் சில அனுபவங்கள் வேண்டும் என்று நினைத்தேன்.
நான் நடிப்பு திறனை பெற்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் நான் கேமராவுக்கு முன் தோன்றுவேனா என தெரியாது. திரில்லர் படங்களில் நடிக்க வேண்டும் எனக்கு விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஸ்பைடர் மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் படத்தின் ஹிந்தி மற்றும் பஞ்சாப் வெர்ஷனுக்கு சுப்மன் கில் டப்பிங் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.