இந்தாண்டு திருமணமா? - விளக்கமளித்த ஸ்ருதிஹாசன்
திருமணம் குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு விளக்கமளித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் அவர்கள் முதலில் பாலிவுட் படங்களில் அறிமுகமாகி அதன்பிறகு தென்னிந்தியா சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுடன் பலப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் விஜய்சேதுபதி ஜோடியாக லாபம் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது அதன் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆன்லைனில் ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு பாய் பிரண்ட் இருக்கிறாரா? என கேள்வி கேட்டார்.
அதற்கு ஆமாம் என பதிலளித்த சுருதி, இந்த ஆண்டு திருமணமா? என்ற மற்றொரு ரசிகரின் கேள்விக்கு, இல்லை என பதிலளித்தார். மேலும் மற்றொரு ரசிகர் நீங்கள் தற்போது காதலில் இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்ப, நான் எப்போதுமே காதலில் தான் இருக்கிறேன் என கூறினார் சுருதிஹாசன்.