அப்பா கமல் குறித்து ரஜினி பேசிய விஷயம் - மனம் திறந்த ஸ்ருதிஹாசன்
ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் பேசியுள்ளார்.
ஸ்ருதிஹாசன்
நடிகர் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், நடிகை, பாடகி என பன்முகத்துடன், தமிழ் சினிமாவில் அசத்தி வருகிறார்.
ஸ்ருதிஹாசன், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும், கூலி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி திரைக்கு வர உள்ளது.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கூலி படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவங்களை நடிகை ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.
கமல் குறித்து பேசிய ரஜினிகாந்த்
இதில் பேசிய அவர், "ரஜினிகாந்த் படத்தில் முதன் முறையாக நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அப்பாவுக்கும் அவருக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
அவருடன் பணியாற்றியதால் அவரை பற்றி தெரிந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நிறைய நல்ல விஷயங்கள் ஒன்று சேர்ந்த ஒரு மனிதர் ரஜினி சார்.
அவர் மிகவும் எளிமையாகவும், ஷார்ப்பாகவும் இருப்பார். அனைவரிடமும் மிகவும் கனிவாக நடந்துகொள்வார். படப்பிடிப்பு தளத்தில் அப்பாவை பற்றி நிறைய விஷயங்களை ரஜினி சார் பேசுவார். அப்பா செய்த உதவிகளை பற்றி மிக உயர்வாக பேசுவார்." என கூறினார்.