உங்க சைஸ் என்ன? - ஸ்ருதிஹாசனிடம் ரசிகர் கேட்ட கேள்வியால் அதிர்ச்சி
இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு நடிகை ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்தமகளான ஸ்ருதிஹாசன் நடிகை, இசையமைப்பாளர், பாடகி என பன்முக கலைஞராக திரையுலகில் வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அளித்துள்ள பதில் வைரலாகியுள்ளது.
சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தனது ஃபோட்டோஷுட், பல கிளாமரான ஃபோட்டோக்கள் ஆகியவற்றை அவ்வப்போது பதிவேற்றி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிப்பது வழக்கம்.
இதனிடையே நேற்றைய தினம் இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்திருந்தார். அப்போது ஒரு ரசிகர், உங்கள் லிப் சைஸ் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்ருதிஹாசன், லிப் சைஸ் என்று ஒன்று இருக்கிறதா? என கேட்டு உடனடியாக ஒரு செல்பி எடுத்து பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சமீபகாலமாக நடிகைகளிடம் இந்த மாதிரி அநாகரீகமான கேள்விகள் கேட்பது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.