காதலருடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன் - வைரலாகும் புகைப்படம்
உலக நாயகன் கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ஸ்ருதி, தனது தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை, தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரிலீஸ் ஆனது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்த ‘லாபம்’ படமும் அண்மையில் ரிலீஸ் ஆனது.
சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக விளங்கும் ஸ்ருதிஹாசன், தனது ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள், லேட்டஸ்ட் ஃபேஷன் நகை மற்றும் உடை என பல கிளாமரான ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் அடிக்கடி பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகிறார்.
சோஷியல் மீடியாவில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது. ஸ்ருதி ஹாசன் தற்போது மும்பையை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார்.
இருவரும் ஒன்றாக மும்பையில் வாழ்ந்து வருகின்றனர். தனது காதலருடன் ஜோடியாக தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'எங்கள் மனம் நிறைந்த தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு புகைப்படம், உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.