நியூஸ் பேப்பரில் வந்த செய்தி...தற்கொலைக்கு முயன்ற ஸ்ருதிகா அம்மா..!

Shrutika
By Karthick Feb 04, 2024 03:05 PM GMT
Report

முன்னாள் கதாநாயகியான ஸ்ருதிகா தற்போது சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருக்கின்றார்.

ஸ்ருதிகா

சூர்யா நடித்த "ஸ்ரீ" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிகா. இவர் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். "ஸ்ரீ" படத்தை தொடர்ந்து ஆல்பம், தித்திக்குதே, நள தமயந்தி போன்ற படங்களிலும் நடித்தார்.

shruthika-mom-tries-suicide-while-she-was-young

ஜீவாவின் "தித்திக்குதே" படத்தில் ஸ்ருதிகாவின் 'ஈராக் யுத்தம்' பாடல் பெரிய ஹிட் அடித்தது. ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கணவர் எனக்கு அந்தமாதிரி படம் காட்டினார்; அப்போ எனக்கு அது வந்துருச்சு - ஓப்பனாக சொன்ன ஷ்ருதிகா!

கணவர் எனக்கு அந்தமாதிரி படம் காட்டினார்; அப்போ எனக்கு அது வந்துருச்சு - ஓப்பனாக சொன்ன ஷ்ருதிகா!

தொடர்ந்து, பல வருடங்களுக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளி பரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலம் அடைந்தார் பிரபலமானார். சமூகவலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் ஸ்ருதிகாவின் அண்மை வீடியோ ஒன்றில் அவரின் அம்மா கல்பனா தன்னுடைய காதல் கதையை பற்றி பேசியுள்ளார்.

shruthika-mom-tries-suicide-while-she-was-young

அதாவது தாங்கள் திருமணம் செய்த போது, ஸ்ருதிகாவின் தந்தைக்கு வயது 19 வயது என்றும் பஞ்சாபி பெண்ணான தனக்கு 23 வயசு என்றார். காதலை இருவரும் வீட்டிலும் சம்மதிக்காத நிலையில், வீட்டை விட்டு ஓடி வந்த நேரத்தில் தங்களை எல்லோரும் தேடினார்கள் என்று கூறி, அப்போது சங்கர் ஒரு பொண்ணை கடத்தி விட்டதாக அப்போதைய பேப்பர்களில் நியூஸ் வந்தது என்று கூறினார்.

shruthika-mom-tries-suicide-while-she-was-young

அதனை கண்ட பிறகு தான் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த நேரத்தில், சங்கர்தான் என்னை காப்பாற்றி கூட்டிட்டு வந்தார் என்றெல்லாம் அந்த வீடியோவில் கூறியுள்ளார் ஸ்ருதிகாவின் அம்மா கல்பனா.