மேலாடை இல்லாமல் இருக்கும் ஸ்ருதிஹாசன் - கிண்டல் செய்த ரசிகர்கள்
நடிகை ஸ்ருதிஹாசன் தனது டாப்லெஸ் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
உலக நாயகன் கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், அவரைப்போலவே நடிப்பு,பாடகி,இசையமைப்பாளர் என பன்முக கலைஞராக திகழ்கிறார்.
தமிழில் முன்னணி நடிகையாக விளங்கும் ஸ்ருதிஹாசன் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக செயல்படுவார். தனது ஃபோட்டோஷுட், லேட்டஸ்ட் ஃபேஷன் நகை மற்றும் உடை என பல புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் அடிக்கடி பகிர்வது வழக்கம்.
அந்த வகையில் தனது டாப்லெஸ் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார் .
அதில் முதுகில் ‘ஷ்ருதி’ என தமிழில் டாட்டு பதித்துள்ளார். அந்த புகைப்படத்தை பகிர்ந்து தனது பெயரை சத்தமாக படியுங்கள் என ஸ்ருதிஹாசன் பதிவிட ரசிகர்கள் பலரும் கிண்டலாக கமெண்ட் செய்துவருகின்றனர்.