திருப்பதி கோவில் முன் நடிகைக்கு முத்தம் கொடுத்த கணவர் - பெருகும் எதிர்ப்பு

நடிகை ஸ்ரேயா தனது கணவருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில் அங்கு நிகழ்ந்த சம்பவம் ஒன்று பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்ஸிப் என்பவரை காதலித்து திருமணம் ஆண்ட்ரே கொண்டார்.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா நேற்று காலை தன் கணவருடன் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அப்போது அவர் கோவில் வாசலில் முகத்தை அணியாமல் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஸ்ரேயாவின் கணவர் ஸ்ரேயாவுக்கு கோவில் வாசலில் நின்று முத்தமிட்டுள்ளார். இதன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. பலரும் கோவிலில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்த்திருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்