கணவருடன் லிப்-கிஸ் கொடுக்கும் நடிகை - வைரலாகும் புகைப்படம்
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை தனது கணவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
ஸ்ரேயா கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . திருமணத்திற்கு பின் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்ரேயா வெளியிட்டு வருவார்.
இந்நிலையில் கணவருடன் லிப்-கிஸ் அடித்தபடி இருக்கும் புகைப்படத்தை ஸ்ரேயா பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை தெரிவித்துள்ளார்கள்.