‘’வாரான் வரான் வரான்லே’’ - ஷ்ரேயஸ் அய்யருக்கு தொப்பிவைத்து வரவேற்ற கவாஸ்கர் : வைரலாகும் வீடியோ
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் உள்ளது.
அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் தொடங்கியுள்ளது.
டாஸ் டென்ற இந்திய அணியின் முதல் இன்னிங்கை தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வாலும், சுப்மன்கில் ஜோடி தொடங்கியுள்ளது. இந்த போட்டி மூலமாக இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுக வீீரராக களமிறங்குகிறார்.
? A moment to cherish for @ShreyasIyer15 as he receives his #TeamIndia Test cap from Sunil Gavaskar - one of the best to have ever graced the game. ? ?#INDvNZ @Paytm pic.twitter.com/kPwVKNOkfu
— BCCI (@BCCI) November 25, 2021
அவருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில்கவாஸ்கர் இந்திய அணியின் தொப்பியை அளித்து, இந்திய டெஸ்ட் அணிக்கு வரவேற்றார். இந்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் வீரராக களமிறங்கி உள்ள ஸ்ரேயாஸ் அய்யருக்கு பலரும் வாழ்த்த தெரிவித்து வருகின்றனர். அதேபோல, இந்திய வீரர்கள் இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக பேருந்தில் இருந்து இறங்கி உள்ளே செல்லும் வீடியோவையும் பி.சி.சி.ஐ. தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
கான்பூரில் தன் சிகப்புப் பந்து கிரிக்கெட்டைத் தொடங்கிய ஷ்ரேயஸ் அய்யர் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இதே மைதானத்தில் அறிமுகமாகியுள்ளார்.