'வாத்தி கம்மிங்' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஷ்ரேயஸ் ஐயர் : வைரலாகும் வீடியோ

vaathicoming delhicapitals shreyasiyer
By Irumporai Sep 11, 2021 02:01 PM GMT
Report

வரும் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாவது பாதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயஸ் ஐயர், டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடத் தயாராகி வருகிறார்.

தற்போது டெல்லி அணியுடன் அரபு அமீரகத்தில் முகாமிட்டுள்ளாஷ்ரேயஸ் ஐயர்டெல்லி அணியின் புத்துணர்வு நிகழ்வில் அணி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அ தில் பங்கேற்ற ஷ்ரேயஸ், நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஐபிஎல் 2021 சீசனின் முதல் பாதி ஆட்டத்தின் போது ஐபிஎல் அணி வீரர்கள் இதே பாடலுக்கு நடனமாடி, வீடியோவை இணையத்தில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.