Friday, Jul 25, 2025

ஸ்ரேயஸ் அய்யர் வீசிய பந்தை வாயில் கை வைத்து ஆச்சரியமாக பார்த்த விராட் கோலி... - வைரலாகும் வீடியோ....!

Shreyas Iyer Virat Kohli Viral Video
By Nandhini 3 years ago
Report

ஸ்ரேயஸ் அய்யர் வீசிய பந்தை விராட் கோலி வாயில் கை வைத்து ஆச்சரியமாக பார்த்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியாவுக்கு வருகை தந்த இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வந்தது.

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தது. இதனையடுத்து இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

shreyas-iyer-virat-kohli-viral-video

வாயில் கை வைத்து ஆச்சரியப்பட்ட விராட் கோலி

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நேற்று நடைபெற்ற போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் அய்யர் பந்து வீசினார். அவர் ஆட்டத்தின் 18 ஓவரை வீச வந்தார். அப்போது விராட் கோலி ஸ்லிப்பில் பீல்டிங் செய்தார்.

18 ஓவரின் முதல் பந்தை ஸ்ரேயஸ் வீசினார் ஆப் ஸ்பின்னாக சென்ற அந்த பந்து அதிகமான சுழன்றது. இதைப்பார்த்த விராட் கோலி வாயில் கை வைத்தபடி ஆச்சரியமாக பார்த்தார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.