நான் ரொம்ப பயந்துட்டேன்...இருந்தாலும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு - ஸ்ரேயஸ் ஐயர்
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணி வீரர்கள் தடுமாறினாலும்,ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் அதிரடியாக ஆடி 92 ரன்களை விளாசினார்.
இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறிய நிலையில் பந்து வீச்சாளர்களின் பந்துகளை பறக்கடித்தார்.
இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆட்டமிழந்தார். இதுகுறித்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடிக்காமல் ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.
பேட்டிங் செய்யும் போது முதல் 5 ஓவர்கள் மிகவும் பயம் கொடுத்தது.பந்தை எதிர்கொள்ளவே பதற்றமாக இருந்தது.
பின்னர் எப்படி விளையாடுவது என்று பயிற்சியாளரிடம் கேட்டேன்.அவர் அந்த யுக்திகளை களத்தில் வெளிப்படுத்தினேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.