தோனி எப்போ பேட்டிங் பண்ணாலும் எனக்கு அந்த பயம் இருக்கும் : ஷ்ரேயாஸ் ஐயர் சொன்ன ரகசியம் ?

Irumporai
in கிரிக்கெட்Report this article
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று பிரம்மாண்டமாக துவங்கிய 15-வது ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச பந்துவீச்சை தீர்மானம் செய்ய அதன்படி முதலில் விளையாடிய சிஎஸ்கே அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே குவித்தது.
இந்த போட்டியில் ஏனெனில் 40 வயதான தோனி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய நிலையில் 38 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 50 ரன்களை குவித்தார்.
இந்நிலையில் தோனியின் ஆட்டம் குறித்து பிறகு எதிரணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் பேசுகையில் : எப்போது தோனி பேட்டிங் செய்தாலும் எனக்கு ஒருவித டென்சன் இருந்து கொண்டே இருக்கும். ஏனெனில் போட்டியின் எந்த நேரத்திலும் மொமண்டத்தை மாற்றும் பவர் தோனியிடம் உள்ளது.
அதோடு மைதானத்திலும் சற்று பனிப்பொழிவு இருந்ததால் பந்தை கிரிப் செய்ய கடினமாக இருந்தது. இந்த ஆண்டு புதிய அணிக்காக தலைமைப் பொறுப்பை ஏற்று விளையாடுவதில் மகிழ்ச்சி. என்னை நம்பி கொல்கத்தா அணியின் நிர்வாகமும், ஊழியர்களும் மிகப்பெரிய பொறுப்பினை கொடுத்துள்ளனர்
இந்த வெற்றியை அப்படியே கொண்டு செல்ல விரும்புகிறேன் என்றும் இந்தப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் மிகச் சிறப்பாக பந்து வீசினார் என்றும் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.