வெங்கடேஷ் ஐயரை கேவலமாக திட்டிய ஸ்ரேயாஸ் ,களத்திலேயே நடந்த சண்டை : காரணம் என்ன?
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களத்திலேயே சண்டையிட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஆனால் இது கொல்கத்தா வெற்றி பெற வேண்டிய ஆட்டமாகும்.முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 61 பந்துகளில் 103 ரன்களும், கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களும் எடுத்து உதவினர்.
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியில் முற்றிலும் குழப்பங்கள் தான் இருந்தது. ஆட்டத்தின் 16வது ஓவரை போல்ட் வீச, அதனை வெங்கடேஷ் ஐயர் டீப் கவர் திசையில் அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடினார்.
— Addicric (@addicric) April 18, 2022
பந்து ஃபீல்டர் கையில் சென்றுவிட்டது என தெரிந்தும், வெங்கடேஷ் ஐயர் 2வது ரன் ஓட அழைத்தார். அதனை நம்பி ஸ்ரேயாஸும் பாதி பிட்ச்-க்கு வந்துவிட்டார். ஆனால் கடைசி நேரத்தில் வெங்கடேஷ் ஐயர் மட்டும் அங்கேயே நிற்க, தேவையின்றி டைவ் அடித்து ஸ்ரேயாஸ் தன்னை காப்பாற்றிக் கொண்டார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர், களத்திலேயே அனைவரின் முன்னும் வெங்கடேஷ் ஐயரை ஆவேசமாக திட்டினார்.
இப்படி பொறுமை இழந்ததால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இறுதியில் 19.4 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தில் இதுதான் பெரும் திருப்புமுனையாக இருந்தது.