வைபவ் சூர்யவன்ஷியை ஏன் களமிறக்கவில்லை? என் கைகள் கட்டப்பட்டுள்ளன - இந்திய அணி கேப்டன்
அயர்லாந்து தொடரில் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்காதது குறித்து அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தது.
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) குழுவில் இருந்தும் இரண்டு போட்டிகளில் ஒன்றில் கூட களமிறக்கப்படவில்லை.
அவரை ஏன் களமிறக்கவில்லை என்ற கேள்வி பல தரப்பில் இருந்தும் எழுந்தது.
ஷ்ரேயாஸ் விளக்கம்
இதுகுறித்து விளக்கம் அளித்த இந்திய அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer), "என்னுடைய கைகள் கட்டப்பட்டுள்ளன; இது மிகவும் தனிப்பட்ட விடயம்.
அணிக்குள் விவாதிக்க வேண்டிய ஒன்று. நாங்கள் எந்த வீரர்களை களத்திற்கு அனுப்ப போகிறோம் என்பதையோ, என்ன நடக்க போகிறது என்பதையோ எதிரணிக்கு தெரியும்படி வெளிப்படையாக கூற முடியாது.
சூர்யவன்ஷி ஒரு திறமைசாலி. அவருக்கு வாய்ப்பளிக்கும்போதெல்லாம் அவர் சிறப்பாகவே விளையாடுகிறார்" என தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan