இதுவரை யாருமே செய்யாத சாதனை… மிகப்பெரும் சாதனை படைத்த ஸ்ரேயஸ் ஐயர்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் கால் பதித்துள்ள ஸ்ரேயஸ் ஐயர்,
தனது முதல் போட்டியிலேயே மிகப்பெரும் சாதனை ஒன்றிற்கு சொந்தக்காரராகியுள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி 25ம் தேதி துவங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 52 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் லதாம் 95 ரன்களும், வில் யங் 89 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 49 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்து,
நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 284 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 65 ரன்களும், சஹா 61 ரன்களும் எடுத்தனர்.
இந்தநிலையில், இந்த போட்டியின் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் கால் பதித்த ஸ்ரேயஸ் ஐயர்,
தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் மற்றும் அரைசதம் அடித்திருப்பதன் மூலம் மிகப்பெரும் சாதனை ஒன்றிற்கு சொந்தக்காரராகியுள்ளார்.
அறிமுக போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதமும் அடித்ததன் மூலம்,
அறிமுக போட்டியிலேயே சதம் மற்றும் அரைசதம் அடித்த முதன்முதல் இந்திய வீரர் என்ற மிகப்பெரும் பெருமைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.