ஸ்ரேயாஸ் அய்யர் முழு உடல்தகுதியுடன் இருந்தால் நாளை நிச்சயம் விளையாடுவார் - டிராவிட் பேட்டி...!

Rahul Dravid Shreyas Iyer Cricket Indian Cricket Team
By Nandhini Feb 16, 2023 07:26 AM GMT
Report

ஸ்ரேயாஸ் அய்யர் முழு உடல்தகுதியுடன் இருந்தால் நாளை நடக்க இருக்கும் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நிச்சயம் விளையாடுவார் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி

சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இப்போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தது. இதனையடுத்து இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

இந்தியா - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் - ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 9ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. இப்போட்டியில் களமிறங்கி பட்டையை கிளப்புவதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

shreyas-iyer-rahul-dravid-cricket

டிராவிட் பேட்டி

இது தொடர்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி கொடுக்கிறது. எப்போதுமே ஒரு வீரர் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு வருவது நல்ல விஷயம். காயத்தால் வீரரை இழப்பதை ஒரு போதும் விரும்பமாட்டோம். ஸ்ரேயாஸ் அய்யர் நேற்று கொஞ்சம் பயிற்சியில் ஈடுபட்டார்.

இன்று அவர் எப்படி பயிற்சி மேற்கொள்வார் என்பதை பார்ப்போம். ஆனால் 5 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடும் அளவுக்கு அவர் உடல்தகுதியுடன் தயாராக இருந்தால் நிச்சயம் நேரடியாக ஆடும் லெவனில் சேர்க்கப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒரு வேளை அவருக்கு பதிலாக இடம் பெற்ற வீரர் சதம் அடித்தால் கூட அவரை உட்கார வைத்து விட்டு, காயத்திலிருந்து தேறி அணிக்கு திரும்பும் இது போன்ற முன்னணி வீரருக்கு தான் முதலில் முக்கியத்துவம் கொடுப்போம் என்றார்.