ஸ்டேடியத்தில் மிக அழகான பெண்; அலசி ஆராய்ந்தும் நடந்தது இதுதான் - ஸ்ரேயாஸ் அய்யர்!
ஸ்ரேயாஸ் அய்யர்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் ஸ்ரேயாஸ் அய்யர். இவர் சமீபத்தில் 'கபில் ஷர்மா ஷோ' என்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் சேர்ந்து பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியை நடத்திய கபில் கூறும்போது, ஒவ்வொரு முறை ஸ்ரேயாஸ் அய்யர் பவுண்டரி விளாசும்போதும், 'ஸ்ரேயாஸ் என்னை திருமணம் செய்யுங்கள்' என்ற போஸ்டர்களை ஏந்திய இளம்பெண்களை நோக்கி கேமிரா கவனம் செலுத்தி கொண்டிருக்கும். இதன்பின் கேமிராமேனிடம் சென்று அந்த இளம்பெண் எங்கே அமர்ந்திருந்தார் என்று நீங்கள் கேட்டதுண்டா? என்று கேள்வி எழுப்பினார்.
அழகிய பெண்
அதற்கு பதிலளித்த ஸ்ரேயாஸ் அய்யர் "ஐ.பி.எல் போட்டி தொடரின் என்னுடைய முதல் ஆண்டில், பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த மிக அழகிய பெண் ஒருவரை நான் கவனித்தேன்.

உடனே அவரை நோக்கி ஹலோ என்று கையசைத்தேன். இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த நேரத்தில், பேஸ்புக் பிரபலம் அடைந்திருந்தது. அதனால், ஏதேனும் ஒரு செய்தி அதில் வரும் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். அதனை அலசி ஆராயவும் செய்தேன். எனக்கு நடந்த ஒரே ஒரு விஷயம் அதுமட்டும் தான்" என்று தெரிவித்துள்ளார்.
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil