வந்தா ராஜாவாக தான் வருவேன் - டெல்லி கேப்பிடலில் மீண்டும் ஸ்ரேயாஸ் ஐயர்
டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமாகி மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் பொழுது இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்க்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் இவரால் 2021 ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் பங்கு கொள்ளவில்லை. அவருக்கு பதில் டெல்லி கேப்பிடல் அணியை இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கேப்டன் பொறுப்பை ஏற்று வழி நடத்தினார்.
தற்பொழுது காயத்திலிருந்து குணமாகி மீண்டும் விளையாட காத்திருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது தனக்கு ஏற்பட்ட அந்த நிகழ்வு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
லண்டனில் அறுவை சிகிச்சைக்காக சென்ற பின் நாடு திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயர் நேஷனல் கிரிகெட் அகடமி பயிற்சியை மேற்கொண்டார்.
தற்போது இவர் விளையாட முழுத் தகுதியுடன் இருக்கிறார் என்ற செய்தியை அந்த கிரிக்கெட் அகாடமி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது பேசியதாவது, இது எனக்கு கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பு, குறிப்பாக காயத்திலிருந்து மீண்டு வந்த பின் ஐபிஎல் போட்டி மற்றும் உலக கோப்பை தொடரில் ஆகிய இரண்டு போட்டியிலும் பங்கு கொள்வதில் மிகவும் சந்தோஷமாக உள்ளது.
கடந்த நான்கு மாதங்களாக நான் மிகத் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன் குறிப்பாக நானோ இதே எடுக்கவில்லை என்று கூறலாம் அந்த அளவிற்கு மீண்டும் விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தில் என்னுடைய முழு கவனத்தையும் பயிற்சி செலுத்தினேன் என்று ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்.
துபாயில் நடக்க உள்ள 2021ஐபிஎல் தொடரில் மீண்டும் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட இருப்பதால் டெல்லி கேப்பிடல் அணி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.