InD Vs Aus முதல் டெஸ்ட் போட்டி - ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்..?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்..?
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இப்போட்டி பிப்ரவரி 9 முதல் மார்ச் 13 வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிலிருந்து விலகியிருந்தார்.
அவரது காயம் எதிர்பார்த்தபடி குணமடையாததால், முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக டி20 கிரிக்கெட்டின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அல்லது சுப்மன் கில் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
According to Indian Express Report:
— Niche Sports (@Niche_Sports) February 1, 2023
Shreyas Iyer ruled out of 1st Test against Australia; Iyer will be available for 2nd Test subject to a fitness test. Suryakumar Yadav likely to make debut in 1st Test.
?: BCCI/PTI #INDvAUS #BorderGavaskarTrophy #SuryakumarYadav pic.twitter.com/dxirDlvGAR