ஐசியூ-வில் ஸ்ரேயாஸ்; அவசர விசா - என்ன நடந்தது? தவிக்கும் பெற்றோர்!

Shreyas Iyer Indian Cricket Team
By Sumathi Oct 27, 2025 02:56 PM GMT
Report

ஸ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர்

இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது விலா எலும்பில் பயங்கர காயம் ஏற்பட்டது.

ஐசியூ-வில் ஸ்ரேயாஸ்; அவசர விசா - என்ன நடந்தது? தவிக்கும் பெற்றோர்! | Shreyas Iyer Icu Admission Parents Emergency Visa

அதன் காரணமாக அவர் சிட்னி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது பெற்றோர் உடனடியாக சிட்னிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளனர். அதற்காக அவரது பெற்றோர் உடனடியாக சிட்னிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி, அவசர விசாவுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த நடைமுறையை துரிதப்படுத்தவும், ஆஸ்திரேலியா செல்ல தேவையான பயண ஏற்பாடுகளை கவனிக்கவும் பிசிசிஐ உதவி வருகிறது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ),

குகேஷுக்கு ரூ.5 கோடி; ஆனால், கார்த்திகாவிற்கு மட்டும் ரூ.25 லட்சம் - ஏன்?

குகேஷுக்கு ரூ.5 கோடி; ஆனால், கார்த்திகாவிற்கு மட்டும் ரூ.25 லட்சம் - ஏன்?

பெற்றோர் தீவிரம்

"பீல்டிங்கின் போது ஸ்ரேயாஸ் ஐயரின் இடது பக்க கீழ் விலா எலும்பு பகுதியில் அடிபட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நடத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், அவரது மண்ணீரலில் சிதைவு காயம் (laceration injury to the spleen) ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

shreyas iyer

ஸ்ரேயாஸ் தற்போது மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது, மேலும் அவர் காயத்திலிருந்து நன்கு குணமடைந்து வருகிறார். பிசிசிஐ மருத்துவக் குழு, சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து,

அவரது நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்திய அணி மருத்துவர், ஸ்ரேயாஸுடன் சிட்னியிலேயே தங்கி அவரது அன்றாட முன்னேற்றத்தைக் கண்காணிப்பார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.