ஐபிஎல் தொடரில் தோனியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயஸ் ஐயர்
18வது ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர்
இதில் பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருவதோடு, பல சாதனைகளும் முறியடிக்கப்பட்டு வருகிறது.
இதே போல், ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
முன்னதாக மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்காக விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர், கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
2024 ஐபிஎல் தொடரில் அவரது தலைமையிலான அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து, இந்த ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணி அவரை ரூ.26.75 கோடிக்கு வாங்கி, பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமித்தது.
இந்த ஐபிஎல் தொடரில், இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும், வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
கேப்டனாக தொடர்ந்து 8 வெற்றி
கடந்த 2024 ஐபிஎல் தொடரிலும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி கடைசியாக நடந்த 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் கேப்டனாக வெற்றி பெற்று தோனியின் சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் முறியடித்துள்ளார்.
தோனி தலைமையிலான சென்னை அணி கடந்த 2013 ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 7 வெற்றிகளை பெற்றது.
இதே போல், 2008 ஆம் நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் வென்றது. அந்த சாதனையை ரேயாஸ் ஐயர் சமன் செய்துள்ளார்.
இந்த பட்டியலில், 2014 மற்றும் 2015 ஐபிஎல் தொடர்களில் தொடர்ச்சியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றதால் அந்த அணி கேப்டன் கௌதம் காம்பீர் முதலிடத்தில் உள்ளார்.

Ethirneechal: விஷமருந்தி உயிருக்கு போராடும் விசாலாட்சி... கதறி துடிக்கும் குடும்பம்! சூடுபிடிக்கும் எதிர்நீச்சல் Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
