கொல்கத்தா அணியின் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடித்த அதிர்ஷ்டம் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமித்து அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்தது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் போட்டிப் போட்டு எடுத்த நிலையில் பல எதிர்பாராத சம்பவங்களும் நடந்தது.
அந்த வகையில் கொல்கத்தா அணி ஸ்ரேயாஸ் ஐயரை கடும் போட்டிகளுக்கிடையே ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் அந்த தொடரில் தங்கள் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றிருந்தார்.
ஆனால் கடந்தாண்டு ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றப்பட்டு ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.மீண்டும் அணிக்கு திரும்பினாலும் கேப்டன் பதவி கிடைக்காததால் அணியில் இருந்து வெளியேறி ஏலத்தில் பங்கேற்றார். அதேசமயம் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கொல்கத்தா அணி ரஸல், சுனில் நரேன், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி ஆகியோரை தக்க வைத்தது.
ஆனால் அந்த அணியின் அணியின் கேப்டனாக விளையாடிய இயான் மோர்கனை அந்த அணி தக்க வைக்கவில்லைஇந்நிலையில் கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமிப்பதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.