ஸ்ரேயாஸ் அய்யரால் ரிஷப் பண்ட்க்கு நேர்ந்த சிக்கல்
ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் மீண்டும் ஸ்ரேயாஸ் அய்யர் இணைந்து விளையாட உள்ளார்.
2020 ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பே, டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.இதனால், விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்டை கேப்டனாக டெல்லி அணி நிர்வாகம் நியமித்தது.
அவரது தலைமையில் ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்படும் வரை 8 போட்டிகளில் 6ல் வென்று, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை டெல்லி கேபிட்டல்ஸ் பிடித்தது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் காயம் காரணமாக விலகியிருந்த ஷ்ரேயாஸ் மீண்டும் இணைய உள்ளார். ஆனால் கேப்டன் பதவி யாருக்கு செல்லும் என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
அதேசமயம் கேப்டன் பதவி எனக்கு முக்கியமில்லை.கோப்பையை ஏந்த வைப்பதே எனது ஒரே குறிக்கோள் என ஸ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார்.