பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் கர்ப்பம்
singer
movie
shreya
By Jon
காந்தக்குரலின் சொந்தக்காரியான பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என இந்திய மொழிகளில் ஸ்ரேயா கோஷலின் குரலுக்கு அடிமையானவர்கள் பலர். இவர் கடந்த 2015ம் ஆண்டு தன்னுடைய நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னரும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி வருகிறார், இந்நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு அழகிய புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.