கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை - கதறிய ஷ்ரேயா கோஷல்!
பெண்களின் கவுரவம், பாதுகாப்பு முக்கியம் என்றும், மனித இனத்தின் மிருகங்களுக்கு எதிராக ஒன்றுபடுவோம் எனப் பாடகி ஷ்ரேயா கோஷல் குரல் கொடுத்துள்ளார்.
கொல்கத்தா
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் பயிற்சி மருத்துவர் ஆகஸ்ட் 8ஆம் தேதி மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
இவரது உடற்கூறு ஆய்வில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் தெரிய வந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். நாடு முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும் பெண் பயிற்சி மருத்துவர் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தற்பொழுது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .தொடர்ந்து சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது .இந்நிலையில் கொல்கத்தாவில் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி பாடகி ஷ்ரேயா கோஷல் இசை நிகழ்ச்சி நடக்கவிருந்தது.
ஷ்ரேயா கோஷல்
ஆனால் கொல்கத்தா மருத்துவ மாணவி படுகொலை விவகாரம் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் இசை நிகழ்ச்சியை ரத்து செய்திருப்பதாகப் பாடகி ஷ்ரேயா கோஷல் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,'' கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு ஏற்பட்ட சம்பவத்தால் உடலில் நடுக்கம் ஏற்பட்டது.
இதயம் உடைந்து விட்டது. மிகுந்த வேதனை அடைந்தேன்.
கொல்கத்தாவில் நடக்கவிருந்த எனது நிகழ்ச்சியைத் தள்ளி வைத்திருக்கிறேன். உலக அளவில் பெண்களின் பாதுகாப்பிற்காகப் பிரார்த்தனை செய்கிறேன். தொடர்ந்து பெண்களின் கவுரவம், பாதுகாப்பு முக்கியம் என்றும், மனித இனத்தின் மிருகங்களுக்கு எதிராக ஒன்றுபடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.