40 வயதில் ஒரு பாட்டுக்கு ஆட ரூ.1 கோடி கேட்ட ஸ்ரேயா - அதிர்ச்சியில் தயாரிப்பாளர்
ஒரு பாடலுக்கு நடனமாட ஸ்ரேயா ரூ.1 கோடி கேட்பதாக கூறப்படுகிறது.
ஸ்ரேயா
தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா. பல திரைப்படங்களில் முன்னணியாக நடித்தப்பிறகும், பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது கிடைத்த வேடத்தில் நடித்து வருகிறார்.
படக்குழு அதிர்ச்சி
தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக அவ்வப்போது ணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படமொன்றில் குத்துப்பாடலுக்கு மட்டும் நடனம் ஆட ஸ்ரேயாவை அணுகியுள்ளனர்.

அதற்கு ஸ்ரேயா ரூ.1 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan