என்ன மனுஷன் நீங்க? பிரதமர் மோடியிடம் கத்துக்கோங்க - விஜய்-யை விளாசி தள்ளிய ரசிகர்
பிரதமர் மோடியிடம் கற்றுக்கொள்ளுங்கள் என ரசிகர் நந்தகோபால் ஒருவர் நடிகர் விஜய்யிடம் எழுப்பிய கேள்விகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இசை வெளியீட்டு விழா
இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் வாரிசு. இத்திரைப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு,சம்யுக்தா, சங்கீதா என பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அடுத்த மாதம் 12ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி தான் தற்போது வைரலாகி வருகிறது.
குட்டி ஸ்டோரி சொன்ன விஜய்
அந்த கதையை அவரே எடுத்துச் சொன்னார். அப்போது அவர், ஒரு குடும்பத்தில அப்பா அம்மா தங்கை அண்ணன் இருக்காங்க. அப்பா தினமும் தன் குழந்தைகளுக்காக சாக்லேட் வாங்கிட்டு வராரு.
தங்கச்சி தனக்கு கொடுத்த சாக்லேட்டை தினமும் உடனே சாப்பிட்ருவாங்க. அண்ணன் மட்டும் சாக்லேட்டை ஒளிச்சு வைச்சு மறுநாள் சாப்பிட நினைப்பார். ஆனால் தங்கை அந்த சாக்லேட்டையும் எடுத்து சாப்பிட்டு விடுவார்.
ஒரு நாள் தங்கச்சி அண்ணன்கிட்ட அன்புன்னா என்னனு கேட்கும் போது, நீ எடுப்பனு தெரிஞ்சும் நான் அதே இடத்துல திரும்ப, திரும்ப சாக்லேட் வைக்கிறேன்ல அதுக்கு பேரு தான் அன்பு.
அன்பு மட்டுமே உலகத்தை ஜெயிக்க கூடிய ஒரு விஷயம். ரசிகர்களின் அன்பே எனக்கான போதை. அன்பே என்பது உலகின் மிகப்பெரிய ஆயுதம். என்றார்.
பெற்றோரை கண்டு கொள்ளாத நடிகர் விஜய்
இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், அம்மா ஷோபாவும் கலந்து கொண்டனர்.
அங்கு அவர்களை பார்த்த நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு வணக்கம் வைப்பது போல் சாதரணமாக வணக்கம் வைத்தார்.
கடந்த சில ஆண்டுகளாக தனது பெற்றோரை பிரிந்து வாழும் விஜய், அவர் சொன்ன கதையை அவர் தனக்கே திருப்பி சொல்லி தனது பெற்றோருக்கு அன்பு செலுத்த வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
கேள்வி எழுப்பிய ரசிகர்
இதுநாள் வரை விஜய்யின் தீவிர ரசிகராக திண்டுக்கல்லை சேர்ந்த நந்தகோபால் என்பவர் அவரது முகநுாலில் பதிவிட்டுள்ள தகவல் கடும் விவாதத்தை உண்டாக்கி வருகிறது.
அவர் பதிவிட்டுள்ள பதிவில், விஜய் அண்ணா நீங்கள் அடைந்த உயரம் மிக பெரியது இந்த இடத்திற்கு நீங்கள் வர பல கஷ்டங்களை சந்தித்து இருப்பீர்கள் ஆனால் இவ்வளவு உயரம் சென்ற நீங்கள் உங்களை உயர்த்திய பெற்றோரை நடு ரோட்டில் யாரோ போல கவனிக்காத விதமாக செல்வது உண்மையில் வேதனையாக இருக்கிறது.
முதலில் நீங்கள் மாறுங்கள் பிறகு மற்றவருக்கு அறிவுரை சொல்லலாம் உங்களுக்கு பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் தொலைபேசியில் தோற்றேன், நேற்று கூட உங்கள் பெற்றோர் தொடர்பு கொண்ட போது யார் செல் போனை எடுத்தது என உங்கள் மன சாட்சிக்கே விட்டு விடுகிறேன்.
உலக தலைவராக உயர்ந்த இந்திய பிரதமர் மோடி கூட அவரது தாய் பிறந்த நாளில் நேரடியாக சென்று அவரிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார் ஆனால் நீங்கள் 10 ஓடு பதினொன்றாக உங்களது பெற்றோருக்கு கை குலுக்கி செல்வது நீங்கள் எவ்வளவு தூரம் நடிகனாக மாறி இருப்பதை உணர்த்தி இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.