விஜய் இல்ல...தலைவன "தளபதி"ன்னு சொல்லுங்க ....புஸ்ஸி ஆனந்த் அட்வைஸ்
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை பனையூரில் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
அணிகளை வலுப்படுத்தும் விஜய்
தமிழ் சினிமாவின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் விஜய், தற்போது லியோ படத்தின் வெளியீட்டு பணிகளையும், அடுத்த விஜய் 68 படத்தின் பணிகளில் மும்முரமாக இயங்கி வரும் அதே நேரத்தில் மக்கள் இயக்க பணிகளையும் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
விரைவில் அரசியலுக்கு விஜய் வருவார் என பல தரப்பில் இருந்து கருத்துக்கள் கூறப்பட்டு வரும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் விஜய்யும் கல்வி விருது விழா, தொழில்நுட்ப அணி, வழக்கறிஞர்கள் அணி என தொடர்ந்து நிர்வாகிகளை இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடத்தி வருகின்றார்.
புஸ்ஸி ஆனந்த் அட்வைஸ்
இதன் வரிசையில், இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. சென்னை பனையூரில் நடைபெற்ற புஸ்ஸி ஆனந்த் தலைமை தங்கிய நிலையில், பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொண்ட மகளிரணி நிர்வாகி ஒருவர், தான் விஜய்யின் மிக பெரிய ஃபான் என கூறிய போது, குறுக்கிட்ட புஸ்ஸி ஆனந்த் விஜய் என பெயர் சொல்லி அழைக்கவேண்டும் தலைவனை தளபதி என கூறுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார்.