விளையாடிய குழந்தைகளை விரட்ட துப்பாக்கி சூடு நடத்திய பாஜக அமைச்சரின் மகன் - விளக்கம் கொடுத்த தந்தை

Shot with a gun Son of a BJP minister
By Nandhini Jan 24, 2022 09:40 AM GMT
Report

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை நோக்கி பாஜக அமைச்சரின் மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இது உண்மை இல்லை என்று பீகார் சுற்றுலாத்துறை அமைச்சர் நாராயண் பிரசாத் தெரிவித்துள்ளார். பீகார், மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள ஹர்டியா கிராமத்தில் நாராயண் பிரசாத்துக்கு சொந்தமான நிலத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்களை அமைச்சரின் மகன் வெளியேற சொன்னார்.

இதனால், அமைச்சரின் மகனுக்கும், கிராமவாசிகள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனால், ஆந்திரமடைந்த அமைச்சரின் மகன் பப்லு கூட்டத்தினரை பயமுறுத்த தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். இதில், கிராமவாசிகள் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இதனை முற்றிலும் மறுத்துள்ள அமைச்சர் நாராயண் பிரசாத், தனது மகன் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்றும், தனது மகனின் துப்பாக்கி போராட்டகாரர்களால் பறிக்கப்பட்டதாகவும், தன் மீதான நற்பெயரை கெடுக்க வேண்டுமென்றே அவதூறு பரப்பப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார். 

விளையாடிய குழந்தைகளை விரட்ட துப்பாக்கி சூடு நடத்திய பாஜக அமைச்சரின் மகன் - விளக்கம் கொடுத்த தந்தை | Shot With A Gun Son Of A Bjp Minister