நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது துப்பாக்கிச் சூடு

Delhi
By Thahir Apr 21, 2023 11:30 AM GMT
Report

டெல்லி சாகெட் நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் உள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

நீதிமன்ற வளாகம் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள தெற்கு மாவட்ட பகுதியில் சாகெட் நீதிமன்றம் உள்ளது.

அங்கு இன்று காலை 10.30 மணி அளவில் துப்பாக்கி சூடு நடந்தது. அதில் ராதா என்ற பெண் தாக்கப்பட்டுள்ளார். அந்த பெண் தனது வழக்கறிஞர் உடன் நின்றிருந்தார்.

அப்பொழுது அந்த பெண்ணை நோக்கி நான்கு, ஐந்து முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் அவரது வயிறு மற்றும் கையில் குண்டு பாய்ந்துள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது துப்பாக்கிச் சூடு | Shot On Woman In Court Premises

அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். போலீஸ் விசாரணை இந்நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியபோது,

முதலமைச்சர் கண்டனம்

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வழக்கறிஞர் ராஜேந்திர ஜா என்று அடையாளம் காணப்பட்டது. அவர் பார் கவுன்சிலால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவர் மீது ஐபிசி பிரிவின் 420-ன் கீழ் வழக்கு உள்ளது என்பது தெரியவந்துள்ளது. அவர் அங்கு உள்ள உணவகத்தின் வழியே தப்பி ஓடினார் என்றும், அவரை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர் என்றும் துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

 இதனை தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்ததாக கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.