வேலூரில் விஜய் சொன்ன குட்டிக்கதை

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Fathima Feb 23, 2026 07:34 AM GMT
Report

வேலூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குட்டிக் கதையுடன் தனது உரையைத் தொடங்கினார்.

குட்டிக்கதையில், ஒரு ஊர்ல நாலு வழி சந்திப்பு இருக்கு, நடுவுல முரட்டு ஜல்லிக்கட்டு காளை.

யாருமே பக்கத்துல போகல, காளையை அடக்கினால் தான் நல்லது, அப்போது சிலர், எங்களுக்கு இல்லாத அனுபவமா? நாங்கள் பாக்காத காளையா? என போனாங்க. காளை அவங்கள தூக்கி வீசியது.

அப்போ ஒரு சின்ன பையன் போறான், எங்களால முடியல நீ என்ன செய்ய போற என பேசுறாங்க, பரிதாப்படுறாங்க.

வேலூரில் விஜய் சொன்ன குட்டிக்கதை | Short Story In Vijay Tvk Meeting

ஆனால் அந்த சின்ன பையன் புல்லுக்கட்டை எடுத்து குடுக்குறான், புல்லுக்கட்டை சாப்பிட்ட காளை அமைதியாகிவிட்டது, குழந்தையை போல நடந்து வந்துச்சு.

அங்குவந்த பெரியவர், எப்படிப்பட்ட அடக்குனா என கேட்டாங்க, அந்த காளையை பார்த்தால் பசியோடு இருந்துச்சு, அதனாலா சாப்பாடு குடுத்தேன், அதுவும் என்னோடு வந்துவிட்டது.

பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய்?

பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய்?


இதைகேட்ட பெரியவர், சின்னவங்க, பெரியவங்க, அனுபவம் உள்ளவங்க, இல்லாதவங்க என எதுவும் இல்லை.

சூழ்நிலைக்கு ஏத்தவாறு பிரச்சனையை தீர்ப்பது தான் முக்கியது என கூறினார்.

இந்த கதையில் முரட்டு காளைதான் அரசியல் களம், பெரியவர்தான் மக்கள், சின்ன பையன்தான் நானும் தவெகவும்.

நல்ல தலைமை இல்லாததால் ஸ்டாலின் கொடுத்த பொய்யான வாக்குறுதியை நம்பி ஏமாந்த மக்கள் மத்தியில் வெகுஜன கட்சியாக வந்ததுதான் தவெக” எனத் தெரிவித்தார்.