நாளை முதல் தி.நகரில் கடைகள் திறப்பு .. எந்தெந்த இடங்கள்?..
சென்னையில் தி நகர், புரசைவாக்கம், உட்பட ஒன்பது இடங்களில் நாளை முதல் வணிக வளாகங்கள் திறக்கப்படுகிறது. சென்னயில் வணிகவளாகங்கள் அதிகம் உள்ள இடங்களில் கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியதால் கடந்த 31ஆம் தேதி முதல் நாளை காலை 6 மணி வரை கடைகள் மற்றும் அங்காடிகள் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தொற்று பாதிப்பு எண்ணிக்கையைப் பொறுத்து வரும் வாரங்களில் நேரக் கட்டுப்பாடு விதிக்க மாநகராட்சி முடிவு எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதன்படி, ரங்கநாதன் தெரு சந்திப்பில் உள்ள வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரையிலும், புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரையிலும், ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, பக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா சாலை, புலிபோன், பஜார், என்.எஸ்.சி போஸ் சாலை, குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, ராயபுரம் சந்தை பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோயில் வரை, அமைந்தகரை சந்தை பகுதி, புல்லா நிழற்சாலை, திருவிக நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட் ஹில்ஸ் சந்தை பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரையுள்ள கடைகள் நாளை காலை முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது