ஷாப்பிங் மால் செட்டப்.. தளபதி விஜய்யின் பீஸ்ட் அப்டேட் தெரியுமா?

vijay thalapathi65 Beast Update
By Irumporai Jun 24, 2021 10:43 AM GMT
Report

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு ஜூலை 1 முதல் சென்னையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்குபீஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.இது அவருடைய 65-வது படம்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க முகமூடியில் நடித்த  பிரபல நடிகை பூஜா ஹெக்டே  கதாநாயகியாக தேர்வாகியுள்ளார்.

 பீஸ்ட் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில வாரங்களாகப் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்த நிலையில் திரைப்படப் படப்பிடிப்புக்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஷாப்பிங் மால் செட்டப்.. தளபதி விஜய்யின் பீஸ்ட்  அப்டேட் தெரியுமா? | Shopping Mall Setup Vijay S Beast Update

இதனால், ஜூலை 1 முதல் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் போடப்பட்டிருக்கும் பிரம்மாண்ட ஷாப்பிங் மால் செட்டில் படமாக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.