கொலை வழக்கில் தேடப்பட்டவரை பிடிக்கும் போது துப்பாக்கிச் சூடு - செங்கல்பட்டில் பரபரப்பு..!

Tamil nadu PMK Tamil Nadu Police Death
By Thahir Jul 10, 2023 02:25 AM GMT
Report

செங்கல்பட்டில் பாமக நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாமக நிர்வாகி படுகொலை

செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த பாமக நகர செயலாளர் நாகராஜ் நேற்று இரவு மர்ம நபர்களால் அரிவாலாள் ஓட ஓட துரத்து வெட்டப்பட்டார்.

அவரை படுகாயங்களுடன் மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பாமக நகர செயலாளர் நாகராஜ் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார் 

படுகொலை வழக்கில் அஜய் என்பவரை போலீசார் பிடிக்க முயன்ற போது அவர் போலீசாரை ஆயுதங்களால் தாக்க முயன்றதால் போலீசார் துப்பாக்கியால் அஜய் காலில் சுட்டனர்.

Shooting while arresting two in murder case

தற்போது அஜய்க்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த படுகொலை வழக்கில் தொடர்புடைய கார்த்தி என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.