மேற்கு வங்க தேர்தலில் துப்பாக்கிச் சூடு: பாஜக பரபரப்பு புகார்
election
shoot
bjp
west bengal
By Jon
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அங்கு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம்,பக்வான்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கும் முன் வாக்காளர்களை சிலர் அச்சுறுத்த முயன்றதாக புகார் கூறப்படுகிறது.
தடுத்தபோது மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருடன் சிலர் சேர்ந்து அர்கோலில் வாக்காளர்களை அச்சுறுத்தியதாக பாஜகவினர் புகார் கூறுகின்றனர்.