பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு 6 பேர் உயிரிழப்பு - போலீசார் எச்சரிக்கை

Germany Death
By Thahir Mar 10, 2023 03:50 AM GMT
Report

ஜெர்மன் ஹம்பர்க் நகரில் பொதுமக்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 பேர் உயிரிழப்பு 

ஜெர்மன் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஹம்பர்க் பகுதியில் உள்ள தேவாலயத்தில் பொதுமக்கள் அதிகம் இருந்த பகுதியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சம்பவ இடத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Shooting on civilians in Germany leaves 6 dead

மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் ஒரு கட்டடிடத்தில் பதுங்கி இருக்கலாம் என்பதால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.