பூஜையுடன் தொடங்கியது தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு
                    
                vijay
            
                    
                master
            
                    
                thalapathi65
            
                    
                suntv
            
            
        
            
                
                By Jon
            
            
                
                
            
        
    தளபதி விஜய் அவர்களது 65வது படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது,இதில் படத்தின் முக்கிய நபர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜயின் 65-வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. விஜயின் 65வது திரைப்படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் சென்னையில் பூஜையுடன் தொடங்கிய நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.