பாக்யராஜ் மரணம்: நாளை படப்பிடிப்புகள் ரத்து

Bhagyaraj
By Fathima Jun 27, 2026 11:11 AM GMT
Report

இயக்குனர் கே.பாக்யராஜ் மறைவையொட்டி நாளை ஒருநாள் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இவரது திடீர் மரணம் ஒட்டுமொத்த திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் திரையுலகினர், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவரது மறைவையொட்டில் நாளை காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.