பார்க்கிங்கில் காரை நிறுத்தி சாப்பிட்ட இளைஞர் மீது துப்பாக்கி சூடு.! பரபரப்பு வீடியோ காட்சிகள்

United States of America
By Thahir Oct 10, 2022 04:27 AM GMT
Report

அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணாத்தில் கார் பார்க்கிங்கில் உணவு சாப்பிட்ட இளைஞர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச் சூடு 

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மெக்டொனால்டுக்கு சென்ற இளைஞர் வாகன நிறுத்துமிடத்தில் சாப்பிடும் போது போலீஸ்காரரால் சுடப்பட்டார். McDonald-ல் இருக்கும் வாகன நிறுத்துமிடத்தில் காரில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த 17 வயது இளைஞனை புதிய போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

பார்க்கிங்கில் காரை நிறுத்தி சாப்பிட்ட இளைஞர் மீது துப்பாக்கி சூடு.! பரபரப்பு வீடியோ காட்சிகள் | Shooting At The Youth Who Ate In The Parking Lot

17 வயது இளைஞர் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த காரைப் பார்த்ததும் பேக்அப் செய்ய அழைப்பு விடுத்துள்ளார். காரின் டிரைவரின் பக்கமாக நடந்து சென்று, கதவைத் திறந்து டிரைவரை வெளியே வர போலீஸ் அதிகாரி உத்தரவிட்டார். ஆனால், அந்த இளைஞன் உடனடியாக காரை ரிவர்ஸில் வைத்து பின்வாங்கத் தொடங்கினார்.

அதைத் தொடர்ந்து காரின் மீது போலீஸ்காரர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். பின்னர் அவர் காரை முன்னோக்கி நகர்த்தி சென்றபோது, மீண்டும் கார் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளார். போலீஸ் சுடுவதை கண்ட இளைஞன் காரின் கதவை மூடிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டார்.

அந்த இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்ட காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெளியான அதிர்ச்சி வீடியோ 

சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞனை புதிய போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுடப்பட்டதை அடுத்து, சான் அன்டோனியோ போலீஸ் அதிகாரி ஜேம்ஸ் பிரென்னண்ட் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இவர் 7 மாதங்களுக்கு முன்பு காவல் துறையில் சேர்ந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது. பயிற்சி மற்றும் நடைமுறைகளை மீறியதற்காக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

கார் ரிவர்ஸ் செய்யும் போது கார் தன்னை மோதியதாகவும், வாகனத்தில் காவலில் இருந்து தப்பித்து அதிகாரியை தாக்கியதாகவும் அந்த வாலிபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.