பிரபல துப்பாக்கி சுடும் வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை - அடுத்தடுத்து தொடரும் சோகம்

suicide shooterkonicalayak
By Petchi Avudaiappan Dec 16, 2021 10:56 PM GMT
Report

ஜார்க்கண்டைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் விராங்கனை கோனிகா லாயக், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்க்கண்டை சேர்ந்த 26 வயதாகும் கோனிகா லாயக் துப்பாக்கி சுடுதலில் தேசிய வீராங்கனையாக உ:ள்ளார். இதற்கு முன்பு  துப்பாக்கி இல்லாத காரணத்தால் அதனை கடன் வாங்கி பயன்படுத்தி வந்த நிலையில் அவரால் 2 முறை தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பிரபல நடிகர் சோனு சூட் ரூ. 2.70 லட்சம் மதிப்புள்ள ஜெர்மன் துப்பாக்கியை கோனிகாவுக்கு பரிசாக அளித்தார். இதனைத் தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் தங்கி, அர்ஜுனா விருதைப் பெற்றவரான ஜோய்தீப் கர்மாகரிடம் பயிற்சி பெற்று வந்தார். 

இந்நிலையில் கோனிகா லாயக் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். கடந்த 4 மாதங்களில் மட்டும் தற்கொலை செய்து கொள்ளும் 4-வது துப்பாக்கி சுடும் வீராங்கனை இவர் என்ற நிலையில் தொடரும் தற்கொலை சம்பவங்கள் விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

இதற்கு முன்பாக குஷாசீரத் கவுர் சாந்து, உனர்தீப் சிங் சோகல் மற்றும் நமன்வீர் சிங் பிரார் ஆகிய வீராங்கனைகள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் அனைவரும் மாநில அளவில் வீராங்கனையாக இருப்பவர்கள் ஆவர். 

இதனிடையே கோனிகா தற்கொலை செய்திருப்பது எங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 10 நாட்களாக அவர் சரியாக பயிற்சியில் கலந்து கொள்வதில்லை. இதற்கு என்ன காரணம் என்று எங்களுக்கு தெரியவில்லை. விரைவில் அவருக்கு திருமணம் நடைபெறவிருந்தது. எது அவரை தற்கொலைக்கு தள்ளியது என்பது பற்றி எங்களுக்கு தெரியாது என அவரது பயிற்சியாளர் ஜோய்தீப் கூறியுள்ளார்.