இந்தியாவை ஜெயிக்க வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது - மனம்திறந்த பாகிஸ்தான் வீரர்

இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டன் மைதானத்தில் 18-ம் தேதி தொடங்க இருக்கிறது.

இந்த போட்டி இருநாட்டு ரசிகர்களிடம் மட்டுமில்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களிடையேவும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாராட்டிப் பேசிய பாகிஸ்தான் அணி வீரர் சோயிப் மாலிக், ”இந்திய அணி எதிர்த்து விளையாடி ஜெயிக்க வேண்டும் என்பதே தனது எண்ணமாக இருந்தது.

என்னுடைய பல இன்னிங்ஸ்கள் இந்திய அணிக்கு எதிராகவே இருந்திருக்கிறது. உலகிலேயே பலம் வாய்ந்த அணியாக இருக்கும் இந்திய அணியை எதிர்த்து விளையாடி மேட்ச் வின்னராக இருந்தால், கிரிக்கெட் உலகம் அந்த வீரரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தைக் கொடுக்கும்.

தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறியுள்ளது. வெற்றிபெற வாழ்த்துக்கள்” எனக் கூறினார்.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்