நேரடி ஒளிபரப்பில் பாஜக தலைவர் மீது செருப்பு வீச்சு: வைரலாகும் வீடியோ

video leader bjp shoe
By Jon Mar 03, 2021 05:02 PM GMT
Report

தற்போது தேர்தல் நடபெற உள்ள மாநிலங்களில் உள்ள தொலைக்காட்சிகளும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது என்றே கூறலாம். தற்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் அனல்பறக்க விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. சில நேரங்களில் தொலைக்காட்சி விவாதங்கள் கருத்து மோதலையும் கடந்து சண்டை களமாக மாறுவதும் உண்டு அந்த வகையில் ஆந்திராவில் உள்ள தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நேரலை விவாதத்தின் போது பாஜக நிர்வாகி மீது செருப்பு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. முக்கிய தலைப்பின் கீழ் நெறியாளர் நடத்திய விவாதம் ஒரு கட்டத்தில் பரபரப்பானது.

பாஜக சார்பில் களமிறங்கிய மாநில பொதுச்செயலாளர் விஷ்ணு வர்தன் வழக்கம்போல் அனைவரையும் பேச விடாமல் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் விவாதம் பாதைமாறியது. அப்போது பாஜகவின் விஷ்ணுவர்தன் மற்றும் அமராவதி பரிரக்‌ஷனா சமிதி இணைச் செயற்குழு உறுப்பினரான கொளிக்காபுடி ஸ்ரீநிவாச ராவ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது திடீரென தனது காலில் இருந்த செருப்பை கலட்டிய ஸ்ரீநிவாச ராவ் திடீரென செருப்பை விஷ்ணுவர்தன் மீது வீசியுள்ளார். உடனடியாக நேரலை நிறுத்தப்பட்டது. தெலுங்கு செய்தி சேனல் ஒன்றில் ஒளிபரப்பப் பட்ட இந்த விவாதத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதன்பின்னர் அந்த உரையாடலில் என்ன பேசினர் என்பது உற்று நோக்கப்பட்டது.

அதாவத விவாதத்தில் பேசிய பாஜகவின் விஷ்ணு வர்தன், அமராவதி பரிரக்‌ஷனா சமிதியின் ஸ்ரீநிவாச ராவை நோக்கி உங்களுக்கும் தெலுங்கு தேசத்துக்கும் தொடர்பு உள்ளது ,நீங்கள் தெலுங்கு தேசக் கட்சியின் ஆள் என்ற தொனியில் கூற கோபமடைந்த ஸ்ரீநிவாச ராவ் செருப்பை கழற்றி விஷ்ணு வர்தன் மேல் வீசியிருக்கிறார்.

இந்த நடவடிக்கைக்கு பாஜக நிர்வாகிகள் கண்டணம் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தான் பணம் கொடுத்து ஆள் அனுப்பியதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் தெலுங்கு தேசத்துக்கு இதில் பங்கு இல்லை என்றால் இந்தச் செயலை சந்திரபாபு நாயுடு கண்டிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.